Top >>Temples >>ஐயப்பன் திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
08. அண்ணாநகர் - சென்னை - தமிழ்நாடு

08. அண்ணாநகர் - சென்னை - தமிழ்நாடு

அண்ணாநகர் -  சென்னை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் அண்ணாநகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சென்னை விமான தளத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

1979 ஆம் ஆண்டு விஸ்வேஸ்வராய கோபுரத்தின் அருகே 40 செண்ட் நிலப்பரப்பில் தமிழ்நாடு வீட்டு வாரியத்தினால் ஒதுக்கப்பட்ட இத்தலம் ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜத்தினரால் கட்டப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

இத்தலம் 1976-ம் ஆண்டு அண்ணாநகரை சுற்றியுள்ள பக்தர்களால் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் இத்தலம் கூரைவேயப்பட்ட ஒரு அறை மட்டும் கொண்டிருந்தது, பின்பு சில ஆண்டுகளுக்குப் பிறகு இதனோடு மற்றொரு அறையில் அறநிலை மருத்துவ மையம் அமைந்திருந்தது

ஆன்மிக ஆர்வலர்களின் உதவியுடன் இத்தலம் 5 வருடத்திற்குள் வளர்ச்சி பெற்று பொலிவுடன் விளங்கியது.

1984-ம் ஆண்டு புகழ்பெற்ற கோயில் கட்டடக் கலைஞர் திரு.காணிபய்யுர் கிருஷ்ணன் நம்பூதிரியால் இத்தலம் கேரள அமைப்பில் வடிவமைக்கப்பட்டு முழுமையடைந்தது.

1984 ம் ஆண்டு மே மாதம் 13 ம் தேதி கோயில் தந்திரி மறைந்த ஸ்ரீ அபிலி கிருஷ்ணா வாத்யான் நம்பூதிரியின் துணைகுரு பிரம்மஸ்ரீ கே.எம். கேசவ பட்டாத்ரிபத் (சபரிமலை ஆலயத்தின் முன்னாள் மதகுரு) ஆகியோரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.. அதே சமயத்தில் சகாதேவதாஸரின் விக்ரகம், விநாயகர், சுப்பிரமணியர், துர்கை, ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகள் அமைக்கப்பட்டது

 இத்தலத்தின் மூலவர் ஐயப்பர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். விநாயகர், முருகர் ஆகியோர் சந்நிதி மூலவருக்கு இடப்பக்கம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். துர்கை சந்நிதி மூலவருக்கு வலப்பக்கம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் நவகிரகங்களின் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளது. இத்தலத்தின் கோபுரம் கம்பீரத்துடன் தனித்துவம் வாய்ந்த பிரம்மிப்பான கலைநுணுக்கத்துடன் 1989 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ம் தேதி  தங்கத்தினால் சூழப்பட்ட கிட்டத்தட்ட 22 கூறுகளுடன் அமைந்த துவஜஸ்தம்பம் நிறுவப்பட்டு கும்பாபிஷேகத்துடன் முழுமையடைந்தது. தாளிகுண்டம் 6 கி.கி தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான வாயிலின் கதவு பித்தளை தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 3600 சதுர அடி நிலப்பரப்பில் விசாலமான மிகப்பெரிய அரங்கம் ஒன்று உள்ளது. இது ஸ்ரீ ஆதிசங்கரர் மடம் என்ற பெயருடன் ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக அமைந்துள்ளது. இந்த அரங்கம் தனித்துவம் வாய்ந்த கேரள ஆலயங்களின் அடிப்படையில் 'கூத்தம்பலம்' வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் சப்தகம்ஸ், உதயஸ்தமன பூஜைகள் போன்றவற்றில் பக்தர்கள் பங்குபெற்று பயனடைகின்றனர். ஆண்டுமுழுவதும் எண்ணற்ற பக்தர்கள் வந்து இங்கு குவிகின்றனர். மகரவிளக்கு விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனின் தரிசனம் காண இங்கு குவிகின்றனர்.

இறுதி உற்சவம் : ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் 21லிருந்து 29 வரை மலையாள மாதம் விருச்சிகம் அன்று நடைபெறுகிறது. இச்சமயத்தின் போது இத்தலத்தில் பிரசாத சுத்தி ரக்ஷ்சோகன ஹோமம் வாஸ்து ஹோமம் வாஸ்து பலி வாஸ்து கலச பூஜை வாஸ்து புண்ணியம் வாஸ்து காலசபிக்ஷ்ம் உத்சவ பலி போன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. இறுதி உற்சவத்தின் போது உற்சவ மூர்த்தி அலங்காரத்துடன் பவனி வந்து கடலில் ஆராட்டு விழா  நடைபெறுகிறது.

கோடி அர்ச்சனை : ஒவ்வொரு நான்காம் வருடம் இறைவனுக்கு கோடி அர்ச்சனை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

 

மேலும் விபரங்களை அறிய www.annanagarayyappatemple.org  என்ற இணையதளத்தை அணுகவும்


அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : சென்னை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​