Top >>Temples >>ஐயப்பன் திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
01. சபரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள மு

01. சபரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள மு

 சபரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடங்களும் விஷேசங்களும்

1. எரிமேலி : 

             எரிமேலியை வந்தடையும் ஐயப்பபக்தர்கள் அங்கு தன் பொருட்களை எல்லாம் வைத்து அதற்கு காவலாக யாரையாவது வைத்து பேட்டைத் துள்ள கிளம்பவேண்டும்எரிமேலியில் சபரிமலையாத்திரைக்கான எல்லா பொருட்களும் கிடைக்கும்பேட்டைத்துள்ளி செல்லும் போது சுவாமி திந்தகத்தோம், ஐயப்பன் திந்தகத்தோம் என்று அனைவரும் கூவிச்செல்லுதல் முறையாகும்.

      

முதல் மூன்று வருடம்  செல்பவர்கள் சரம், வாள், கதை இவைகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கம்பில் சிறிதளவில் காய்கறி வாங்கிக் கட்டி, அதை இருவராகப் பிடித்து கையில்இலையையும் வைத்துக் கொண்டு விருப்பமுள்ளவர்கள் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு, கெட்டிமேளம் கொட்டிக் கொண்டு பேட்டை துள்ளல் துள்ளுவார்கள்.

பேட்டை சாஸ்தாவை பிரதக்ஷிணம் செய்து ஆடி, வாவரை ப்ரதக்ஷிணம் செய்து, அங்கிருந்து தர்மசாஸ்தா ஆலயம் வரை ஆடிச் சென்று பிரதக்ஷிணம் செய்து கொண்டு அங்கு கையில் உள்ளஇலைகளைப் போட்டு நமஸ்காரம் செய்து, பிறகு எரிமேலித் தோட்டில் ஸ்தாபனம் முடித்துக் கொண்டு தர்ம சாஸ்தாவைத் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் தம்சாநான்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்அங்குப் பேட்டை ஆட உபயோகித்த காய்கறிகளைச் சமைத்து உண்ணுவார்கள்.

        

எரிமேலியில் ஐயப்பன்மார்கள் ஒரு தேங்காயை உடைத்து வெடியும் வெடித்து வாவரிடம் சென்று உத்திரவு (பிரசாதம்வாங்கிக்கொண்டு மலை யாத்திரையைத் தொடங்குதல் முறை.

        

   

2. போரூர்தோடு (வாய்க்கால்) :

     

ஐயப்பன் பூங்காவனம் இவ்விடத்திலிருந்து ஆரம்பமாகிறது.

3. காளைக் கெட்டி :

       

இங்கு ஐயப்பன் அழுதா நதியில் மஹிஷியை நர்த்தனம் செய்து நர்த்தனம் செய்த காட்சியைக் காணவந்த பார்வதி பரமேச்சுவரர்கள் ரிஷபத்தை (காளையைஇவ்விடத்தில் ஒரு மரத்தில்கட்டியதாக ஐதீகம்அதனால் இது காளைக் கெட்டி எனப்படும்இவ்விடத்தில் சிவன் கணபதி தேவி கோயில்கள் உள்ளனஇவ்விடத்தில் தேங்காய் உடைத்து வெடி வழிபாடு செய்வது முக்கியம்.

4. அழுதா நதி :

      

 இவ்விடத்தில் தேவலோகத்தில் இருந்து ஐயப்பன் மஹிஷியை எறிந்ததாகவும், அங்கிருந்து மஹிஷியின் மேல் குதித்து அவளைக் கொன்று நர்த்தனமாடியதாகவும் ஐதீகம்இந்நதியில்ஸ்நானம் செய்யும்பொழுது அழுதாமேடு ஏறி, கல்லிடும் குன்றில் கல்இடுவதற்கு இங்கிருந்து ஒரு கல் எடுத்துச் செல்வது முறை.

5. அழுதாமேடு (உச்சி) :

     

(இஞ்சிப் பாறைக் கோட்டை உடும்பாறைமலைஇங்கு ஒரு வெடிவைத்து தேங்காய் வழிபாடு செய்யலாம்.

6. முக்குழி :

  

அழுத மேட்டிலிருந்து இறங்கி வருபவர்கள் முக்குழி வந்தடைந்து அங்கு வலது புறமாகச் செல்லவேண்டும்அரியக்குடி வழி அழுதா நதியை அடையும்முன் தாண்டி மலையை சுற்றி(அழுதாமலை ஏறி இறங்காமல்முக்குழியை அடைகிறதுஇவ்விடத்தில் ஓர் அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.

7. எலவந்தாவளம்

8. கரியிலாம் தோடு (கரிமலைத்தோடு)

9. கரிமலைமேடு :

      

        

 கரிமலை மேட்டில் கரிமலைக் கிணறு இருக்கிறது இது ஒரு ஊற்று போன்றது. இவ்வழியில் வரும் ஐயப்பன்மார்களின் தாகம் தீர்ப்பதற்கு ஐயப்பன் தன் சரத்தினை விட்டு ஒரு கிணறு உருவாக்கியதாக ஐதீகம். இங்கு தேங்காய் உடைத்து வெடி வழிபாடு செய்யலாம்.

10. சிரியானவட்டம்

11. பெரியானவட்டம்

12. பம்பா : 

        

இங்கு வந்து அவரவர்கள் கூடாரங்களை போட்டு கொண்டு ஓரிரு நாள் தங்கிச் செல்லலாம். இந்நதியில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து தங்களால் இயன்ற தான, தர்மங்களைச் செய்வது மிக்க நல்லது. பம்பையில் அன்னதானத்தை முடித்துக் கொண்டு நதியில் பம்பை விளக்கையிட்டு பிறகு செல்வார்கள்.

13. விநாயகர் கோவில் :

 இது பம்பைக்கு மேலாக நீலிமலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு இராமர், ஆஞ்சநேயர், சிவன், தேவி கோவில்களும் உள்ளன.

14. நீலிமலை அப்பாச்சி மேடு :-

     

அப்பாச்சி மேட்டில் வன தேவதைகளுக்கு ப்ரீதியாக வெல்லம், எள்ளு, பொரி உருண்டைகளைப் பள்ளத்தில் போடுவார்கள். இவ்விடமிருந்து மகர ஜோதியைப் பொன்னம்பல மேட்டில் நன்கு பார்க்கலாம்.

15. சபரி பீடம் :-

 இங்கு சபரி, ஸ்ரீராமபிரானின் வருகைக்கு தவம் செய்து கொண்டிருந்ததாக ஐதீகம். இங்கு தேங்காய் உடைத்து, வெடி வழிபாடு செய்தல் ப்ரதானம். இங்கிருந்தும் மகரஜோதியைப் பார்க்கலாம்.

16. சரங்குத்தி :

 இங்கு ஐயப்பன் பந்தளராஜாவிடம்  தனக்கு எத்திசையில் கோவில்  பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, பந்தளத்தில் இருந்து ஒரு சரத்தினை எறிந்து, அது விழுந்த இடத்தைக் காட்டினார். அதனால் பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்த சரம், வாள், கதை இவற்றை இங்கு போட்டுச் செல்ல வேண்டும்.

17. ஐயப்பன் சந்நிதானம் :

                 

தேவலோகத்தில் உள்ள விச்வகர்மாவால் கட்டப்பட்ட கருங்கல்லினால் ஆன பதினெட்டுப்படி உள்ளது. இதில் தேங்காயை உடைத்தல் கூடாது. இப்படியின் இடது ஹோமகுண்டத்தில் பகவானுக்கு அபிஷேகத்திற்காக கொண்டு செல்லும் தேங்காயை இதில் போடுவார்கள். 

          

பதினெட்டாம்படியின் வலப்புறமும் இடப்புறமும் ஐயப்பனின் மெய்காவலர்களான கொச்சுக்கடுத்தை, வலியக்கடுத்தை இவர்களுக்கு இரு கோவில்கள் உள்ளன. இவர்களின் உத்தரவை மானஸீகமாகப் பெற்றுக் கொண்டு சத்தியமான பொன்னு பதினெட்டு படிகளின் பக்கங்களில் தேங்காய் உடைத்து இருமுடியுடன் ஏறினால் மேலே கொடிமரம் உள்ளது. இதன் வலப்புறத்தில் கற்பூர ஆழி உள்ளது. அங்கிருந்து ஐயப்பனுடைய தென்மேற்காகக் கணபதி உள்ளார். 

       

கணபதியின் இடது பக்கத்தில் நாகராஜா இருக்கிறார். இங்கிருந்து கோயிலை பிரதக்ஷிணமாக வந்து ஐயப்பனைத் தரிசனம் செய்து  வடக்கே உள்ள படிகள் வழி இறங்கி வந்தால் அங்கு பஸ்மக்குளம் உள்ளது. இங்கு சபரி தன் ஜடசரீரத்தை பஸ்மமாக்கி, பரமனிடம் சேர்ந்தார் என்று புராணம் கூறுகிறது. இதற்கு பக்கத்தில் நாகராஜர்,  நாகயக்ஷி பிரதிஷ்டை உள்ளது. இங்கு நாகதோஷம் நீங்க வழிபடலாம். இதற்கு அருகில் ஒரு குளம் உள்ளது. முன் காலத்தில் இதில் ஸ்வாமியின் பூஜாப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பொழுது இதை குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்

18. மாளிகைப்புரம் :-

       

 பஸ்மகுளத்திற்குச் சற்று வடக்கில் மாளிகைப்புரத்தம்மனின் (மஞ்சமாதா) ஆலயம் உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் இடப்பக்கமான வழியில் மேலே சென்றால் இடது பக்கத்தில் கருப்பண்ண.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​