Top >>Temples >>ஆறுபடைவீடு - 6
3:30:05 PM         Monday, August 25, 2014 
04. பழமுதிர்சோலை

04. பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரை மாநகருக்கு வடக்கே 20 கி.மீ தொலைவில் கள்ளழகர் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 2 கி.மீ தொலைவில் மிகவும் எழிலோடு அமைந்துள்ளது.

மூலவர் : பழனியாண்டவர்

தீர்த்தம் : நூபுர கங்கை, சிலம்பு ஆறு


தலவரலாறு : இத்தலத்திற்கு 'அழகர் மலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகன் மரத்தின் மேல் அமர்ந்து நாவல் பழத்தை உதிர்த்து ஔவையே! சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு பல அரிய பெரிய கருத்துக்களை கூறி புரிய வைத்த இடம்தான் பழமுதிர்சோலையாகிய இத்தலம் ஆகும். முருகன் அவ்வையிடம் கேள்வி - பதில் நடத்திய தலம். மாமனையும், மருமகனையும் ஒருசேர பார்க்கக்கூடிய தலம்தான் பழமுதிர்சோலையாகிய அழகர்மலை ஆகும்.

வள்ளியை மணமுடிக்க முருகன் இத்தலத்தில் முதியவர் வேடம் கொண்டு, தன் சகோதரரான விநாயகரிடம் உதவி கேட்க, விநாயகர் யானை வேடம் கொண்டு வள்ளியை துரத்த முதியவர் வேடம் கொண்ட முருகன் வள்ளியை கரம்பிடித்த தலம் இத்தலம் ஆகும்.

இம்மலையின் உச்சியில் ராக்காயி கோயில் உள்ளது. அங்கே ஒரு சுனையும் உள்ளது.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : மதுரை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​