Top >>Temples >>சிவாலய ஓட்டம் - 12
3:30:05 PM         Monday, August 25, 2014 
10. திருவிதாங்கோடு

10. திருவிதாங்கோடு

திருவிதாங்கோடு

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து தக்கலை சென்று அங்கிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. இதற்கு திருவிதாங்கூர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : திருவிதாங்கோடு மகாதேவர்

கோயில் அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் பத்தாவது சிவாலயம் ஆகும். மிகப்பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. மூன்று ஏக்கர் பரப்பளவில்  சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. சிவலிங்கம் கருவறை வாயிலைவிடப் பெரியதாக உள்ளது. உள்ளே இயற்கையாக அமைந்த பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பின்னர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. சிவன்கோயிலை அடுத்து தெற்குப்பக்கம் பெருமாள் கோயில் அமைந்துள்ளது பெருமாள் சங்கு, சக்கரம் ஏந்தி மற்றொரு கையில் கதையும் , பத்மமும் ஏந்திக் காட்சியளிக்கிறார். இருகோயில்களுக்கும் தனிப்பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்பிரகாரத்தில் காணப்படும் எல்லா தூண்களிலும் தீபலெட்சுமி சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

தனிச்சிறப்பு : சிவன் கோயிலில் ஒரு யாளியின் வாயினுள் ஒரு கல்லுருளை வெளியே வராதபடி செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் தனித்தனிக் கொடிமரங்கள் காணப்படுகின்றன. மார்கழி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறும். அப்போது கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றப்படும். சிவனும் பெருமாளும் இரண்டு யானைகளில் கோயிலை வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : நாகர்கோயில்

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​