Top >>Temples >>சிவாலய ஓட்டம் - 12
3:30:05 PM         Monday, August 25, 2014 
08. மேலாங்கோடு

08. மேலாங்கோடு

மேலாங்கோடு

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் புலியூர் குறிச்சியிலிருந்து வடக்கே 3 கி.மீ தொவைல் குமாரகோவில் செல்லும் பாதையில் வயல்களின் நடுவில் இத்தலம் உள்ளது புலியூர் குறிச்சிக் கோட்டைக்கு பின்னால் உள்ளது

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் எட்டாவது சிவாலயம் ஆகும். இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. ஒரு பிரகாரம் உள்ளது கோவிலின் முன்பக்கம் வயல்கள், மலையும் நிறைந்து, குறிஞ்சியும், மருதமும் மயங்கிக் கிடக்கும். இங்கு ஒரு சிறிய கோயிலும், தலவிருட்சமும் காணப்படுகிறது. நாகர் வழிபாடும் நடைபெற்று வருகிறது. குமாரகோவிலுக்கு செல்லும் மக்கள் இந்த சிவன் கோவில்களுக்கும் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கமாகவும். இத்தலத்தின் அருகில் மேலாங்கோடு இசக்கி அம்மன்களான அக்கா, தங்கச்சி கோயில்கள் உள்ளன. இரண்டு இசக்கியம்மன் கோயில்கள், சிவன்கோயில் என் மூன்று சந்நிதிகள் ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக உள்ளதால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மாதாமாதம் சிவராத்திரியன்று சிவராத்தி ஓட்டம் ஓடும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். கூட்டம் நிறைந்து காணப்படும்.

பழங்கதை : பத்மநாபபுரத்தில் அந்தணர் வகுப்பைச் சார்ந்த கன்னிப்பெண் தனியாக வசித்துவந்தாள். கொஞ்சம் வசதியும் உண்டு. அவளை ஒரு அந்தணர் வஞ்சகமாக திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கருவுற்றார். பிரசவத்திற்கு அந்தணர் தன் வீடான சுசீந்தரத்திற்கு வருமாறு கூறினார். அப்பெண்ணும் சம்மதித்தாள். தன் சொத்துக்களை விற்று அந்த பணத்தோடு சுசீந்தரத்திற்கு தன் கணவனோடு நடந்து சென்றாள். கள்ளியங்காடு வந்தபோது சோர்வுற்ற அப்பெண் ஓய்வெடுக்க விரும்பினாள். கள்ளிகள் நிறைந்த அக்காட்டில் கணவனின் தொடைமீது தலை வைத்து படுத்தாள். அந்தணன். ஒரு கல்லை எடுத்து தலையணையாக வைத்துவிட்டு எழுந்து இன்னொரு கல்லை அப்பெண்ணின் தலையில் போட்டான். கதறியபடி கண்விழித்த அப்பெண் கணவனின் செயலை பார்த்து "கள்ளி நீயே சாட்சி" என்று கூறியபடி இறந்துவிட்டாள். ஈசனை வேண்டி மீண்டும் பிறப்பெடுத்து அழகிய ஒரு பெண்ணாக உருவெடுத்து கள்ளியங்காட்டிற்கு வந்து வழிப்போக்கர்களை பழிவாங்கிக்கொண்டு அந்தணருக்காக காத்திருந்தாள். அந்தணன் இறந்து விட்டான். மறுபிறவியில் ஒரு செட்டியார் குடும்பத்தில் பிறந்து வாணிபம் செய்து வந்தான். 

ஒருநாள் நள்ளிரவு அவ்வழியாக செட்டியர் வருவதைக் கண்ட அப்பெண் ஒரு கள்ளியை எடுத்து குழந்தையாக மாற்றி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாள். அவள் அழகில் மயங்கிய செட்டியார் அவளிடம் வெற்றிலை கேட்டான். வெற்றிலை கொடுப்பது போல அவனைப் பிடித்து கொன்று உதிரம் குடித்தாள். மீண்டும் வழிப்போக்கர்களை பழிவாங்கினாள்.

இதையறிந்த ஈசன், பார்வதியை அனுப்பி சாந்தப்படுத்துமாறு பணித்தார். பார்வதியைக் கண்ட அப்பெண் கோபம் நீங்கி தேவியை வணங்கினாள். அப்பெண்ணிடம் மக்களை துன்புறுத்துவதை நிறுத்திவிடு என்று கூறினாள். அப்பெண் பார்வதியை நோக்கி அக்கா நீயும் என்னோடு தங்கிவிடு என்று வேண்டினாள். தேவியும் சம்மதிக்க இருவரும் சென்று தங்கிய இடம் மேலாங்கோடு.

அக்காள் தங்கை என்று இருவரும் அழைக்கப்படுகின்றனர். அக்காள் - சென்பகத்தம்மாள் (பார்வதி) தங்கை  நீலி  என்று அழைக்கப்படுகின்றனர்.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : நாகர்கோயில்

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​