Top >>Temples >>சக்தி தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
005 காளிகாம்பாள் - சென்னை - தமிழ்நாடு

005 காளிகாம்பாள் - சென்னை - தமிழ்நாடு

காளிகாம்பாள்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் சென்னை முத்தியால்பேட்டை தம்புச்செட்டித் தெருவில் அமைந்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இக்கோயில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது.

மூலவர் : காளிகாம்பாள்

இறைவன் : கமடேசுவரர்  (அருணாசலேசுவரர்)

தீர்த்ம்  : கடல்

திருத்தலச் சிறப்புகள்: இதிகாசங்களான மச்சபுராணம், வாமனபுராணம், கூர்மபுராணம், லிங்கபுராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் 'பரதபுரி' என்று அழைக்கப்பட்ட தலம் இது. அன்னையை இத்தலத்தில் ஐஸ்வரிய நாயகனான குபேரன் வணங்கி அளவற்ற செல்வத்தைப் பெற்றான். எனவே இது 'சொர்ணபுரி' எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அன்னைக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட கிண்ணித் தேர் உள்ளதும் ஒரு தனிச் சிறப்பாகும். இது நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இதனை மராட்டிய மன்னன் சிவாஜி புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை இன்றும் தரிசிக்கலாம்.

இப்பரதபுரி பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின் மகிமையும், காமாட்சி வாழும் காஞ்சியின் மகிமையும் இணைந்த பெருமைக்குரியதாகும். இது நாகலோகத்துக் கன்னியரும், தேவலோகத்துக் கன்னியரும் அம்பாளை வழிபட்டு அருள் பெற்ற தலம். மேலும் இந்திரன், குபேரன், ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் அம்பாளை வழிபட்ட இடம். இத்தலத்தின் தீர்த்தம் கடல்தான். தேவகன்னியர் அம்பாளை வழிபட்டு அருள் பெற்றதை நினைவூட்டும் விதத்தில் இன்றும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் கன்னிபூசையும், கோபூசையும் இத்தலத்தில் நடக்கிறது. சென்னையில் இவை நடக்கும் ஒரே தலம் இதுதான். மராட்டிய மன்னன் சிவாஜி இந்தப் புண்ணியத் திருநாட்டில் இந்துக் கலாச்சாரத்தை நிலைநாட்டி இந்து சாம்ராஜ்யம் கண்ட சாதனை நாயகனாகத் திகழ்ந்தார். கன்னியருக்கும், சுமங்கலிகளுக்கும் விசேஷ அருள் கிடைக்கும் தலம் இது.

அலைமகளும்,  கலைமகளும் இருபுறமும் விளங்க அன்பே வடிவினளாய் காட்சி தருகிறாள் பெரியநாயகி. இவளோடு சிறிய நாயகி என்ற பெயரில் மற்றொரு உற்சவரும் உண்டு. இக்கோயில் கமடேசுவரர் திருக்கோயில் என்றாலும் அன்னையின் பெயராலே காளிகாம்பாள் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இம்மாநகர் சென்னை என்றுக் கூறுவதற்கு அன்னையே காரணமாகும் ஆதிநாளில் அன்னை காளிகாம்பாளை 'சென்னம்மன்' என்றும் கமடேசுவரரை 'சென்னப்பன்' என்று வழங்கியதால் இம்மாநகர் 'சென்னை' என்று அழைக்கப்படுகிறது.

மகாகவி பாரதியார் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இத்தலத்து காளியை தரிசிக்க வந்துள்ளார். சித்தி விநாயகர் சித்தி, புத்தியரோடு தம்பதி சமேதரராகவும் காட்சி தருகிறார். மேலும் இங்கு அருணாசலேஸ்வரர், வீரபத்ரர், மாகாளி, நாகேந்திரர், விராட் விஸ்வ பிரம்மம், காயத்ரி, வட கதிர்காம முருகன், சிவகாமி, நடராஜர் ஆகியோருக்கு தனித் தனி சந்நிதிகளும் உள்ளது.

விமானதளம்  : சென்னை

ரயில் நிலையம் : சென்னை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​