Top >>Temples >>நவ கைலாயம் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
7. தென்திருப்பேரை

தென்திருப்பேரை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

மூலவர் : கைலாசநாதர்

அம்பிகை : சிவகாமி அம்மன் (பொன்னம்மாள்)

திருத்தலச் சிறப்புகள்: நவகயிலாயத்தில் ஏழாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் புதன் பகவான் அம்சமாக விளங்குகிறார். இறைவன் சிறிய லிங்க வடிவில், தாமரை மலரில் காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதி முன் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.

ஒரு முறை கோயிலுக்கு வந்த அந்த காலத்து ஆங்கிலேய கலெக்டர், கோயில் தென்னைமரத்திலிருந்து இளநீர் பறித்துக் கொண்டு வரச் சொன்னாராம். 'சிவன் சொத்து பறிக்கக் கூடாது' என்று ஊர் மக்கள் கூறினார்களாம். அதற்கு அவர் கோயில் இளநீருக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது. பறித்துக் கொண்டு வா! என்று தனது சேவகனுக்குக் கட்டளையிட அவனும் அவ்வாறே பறித்து போட்டானாம். அதை எடுத்து பார்த்து அவர் அதிர்ந்து விட்டார். அதில் மூன்று கொம்புகள் இருந்ததைக் கண்டு கலெக்டர் பயந்து போய், சுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி மன்னிப்புக் கேட்டாராம். பொதுமக்கள் தொட்டுப் பார்த்ததில் இரண்டு கொம்புகள் ஒடிந்து விழுந்து விட்டன. இப்போது ஒரு கொம்பு மட்டுமே உள்ளது.

 இந்த ஊருக்கு பேரெயில் என்ற பெயரும், திருப்பேர் என்ற பெயரும் உள்ளது. இந்த கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங்கனின் (கி.பி 1109) கல்வெட்டு உள்ளது. இது பெருமாள் கோயிலைச் சார்ந்த கல்வெட்டு. இதில் ராஜராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டுத் திருவழுதி வளநாட்டு தென்திருப்பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வீரகேரளவர்மன் கல்வெட்டில் திருவழுதி வளநாட்டு திருப்பேரான சுந்தரபாண்டியச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளும் உள்ளன. இவை சிவன் கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஆகும்.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​