Top >>Temples >>சிவ திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
011. சதுரகிரி - தமிழ்நாடு

011. சதுரகிரி - தமிழ்நாடு

                                                                                                   சதுரகிரி

      

 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவில் வத்திராயிருப்பு என்ற இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் தாணிப்பாறை என்ற கிராமம் வரும். இது சதுரகிரி மலையின் அடிவாரம். இங்கிருந்து 8 கி.மீ தொலைவில் மலைப்பாதையை கடந்து சென்றால் சதுரகிரியை அடையலாம்.
 

சுவாமி : சுந்தரமகாலிங்கர்,  சந்தன மகாலிங்கர்.

அம்பிகை : ஸ்ரீ சந்தனமகாதேவி

தீர்த்தம் : மலையை சுற்றியுள்ள தீர்த்தங்கள்

 

     

திருத்தல யாத்திரை: சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

     

மலை ஏறத் தொடங்கும் போது காலி வயிறுடன் இருப்பது நல்லது. அப்போதுதான் சுலபமாக மலைஏற முடியும். வயிற்றில் உணவு இல்லாமல் எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ அவ்வளவு தொலைவு விடுவிடுவென்று கடந்துவிட வேண்டும். அதன் பிறகு உணவுப்பொருட்களை உண்ணலாம்.

 வத்திராயிருப்பைத் தாண்டி விட்டால் எந்த ஒரு பொருளையும் வாங்குவது சிரமம். அதன் பிறகு குறிப்பிடத்தக்க ஊர்களோ, கடைகளோ கிடையாது. எனவே ஸ்ரீவில்லிப்புத்தூர் அல்லது கிருஷ்ணன்கோவிலில் இருந்து உணவுகளை தேவையான அளவுக்கு வாங்கிக் கொள்ளலாம். மலைக்கு மேல் ஒட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற எதுவும் கிடையாது.

     

 பக்தர்களை டோலி கட்டிக் கூட்டிச் செல்லும் முறையும் இங்கு உண்டு. மூங்கில் கழி போன்ற ஒரு பெரிய கம்பின் இரு முனைகளிலும் தூளி போல் ஒரு போர்வையைக் கட்டி அதில் தூக்கிச் செல்கிறார்கள்.

இங்கு அமாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற விஷேச நாட்களில் இங்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் குவிகின்றனர். அமாவாசையன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை மகேஸ்வரபூஜை என்பர்.  மலையில் குடிகொண்டுள்ள மகாலிங்க சுவாமிகள் தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்துக்கும் உள்ளாக்குவதில்லை. இம்மலை சித்தர்கள் வாழும் பகுதியாக உள்ளது.

       

 இங்குள்ள பிலாவடி கருப்பர் சந்நிதி ஒரு மண்டபம் போல் அமைந்துள்ளது உள்ளே பழைய கருப்பர் இருக்கிறார். புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீரமான கருப்பரும் இருக்கிறார். மலைக்கு மேலே செல்லும் போதும், கீழே இறங்கும் போதும் இவரிடம் உத்தரவு வாங்கி செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
 
 இங்கு பெரிய பலாமரம் ஒன்றில் ஒரே ஒரு காய் மட்டும் சந்நிதியின் உட்புறமாக கருப்பரின் அருகே காய்த்து தொங்குகிறது. கருப்பருக்கு பக்கத்தில் எப்போதும் சுமாரான அளவில் பலாகாய் ஒன்று காய்த்து தொங்கிக்கொண்டிருக்கும். அது முற்றி விழுந்துவிட்டால் அடுத்து அதே இடத்தில் உடனே இன்னொரு காய் காய்க்கும். இந்த அதிசயம் இங்கு பல வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. 

       

சதுரகிரி பெயர் காரணம் : இத்தலத்தை சுற்றி ஒவ்வொரு திசையிலும் நான்கு மலையாக நான்கு திசைகளிலும் 16 மலைகள் சூழ நடுவில் இத்தலம் அமைந்துள்ளது. 

சந்தன மகாலிங்கர் சந்நிதி : 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

     

 இங்கு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

ரயில் நிலையம்   : ஸ்ரீவில்லிபுத்தூர்

பஸ் வசதி   : இல்லை

தங்கும் வசதி   : பொதுமடங்கள் உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

 

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​