Top >>Temples >>புண்ணிய நதிகள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
02. யமுனா

02. யமுனா

யமுனை

பிறப்பிடம்: வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லிஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுராஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.

நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. கங்கே ச யமுநே ஸைவ கோதாவரீ சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ... என்று நம் புராணங்கள் அவற்றை கூறுகின்றன. இவற்றுள் கங்கைக்கு அடுத்தபடியாக புண்ணிய நதியாக விளங்குவது யமுனை ஆகும். யமுனா, ஜாமுனி முனிவர் துதி செய்த ஜமுனா, யமனின் சகோதரி யமி, தந்தை காளிந்தன் என்னும் தந்தை சூரியனின் பெயரால்காளிந்தி என்னும் பல நாமங்கள் யமுனைக்கு உள்ளது.

வரலாறு:  இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான சியாமள வண்ணமாகவே உள்ளாள். கண்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடன் வசுதேவர் கோகுலத்திற்கு கூடையில் குட்டிக்கண்ணனை எடுத்து செல்லும் போது அவரது நாசி வரை வந்தும் யமுனையின் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. அப்போது அடை மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆகவே ஆதிசேஷன் வந்து பெருமாளுக்கு குடைப்பிடித்தான். அப்போதுதான் பால கிருஷ்ணன் ஒரு திருவிளையாடலை செய்தான் தன் பிஞ்சுக்கால்களால் யமுனையின் தண்ணீரைத் தொட்டான். கண்ணனின் கால்பட்டு புனிதம் அடைந்தாள் யமுனை, உடனே பிரிந்து வழிவிட்டாள். 

யமுனை நதிக்கரை குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் நினைவுகளால் புனிதமடைந்தது. இதன் கரையில்தான் கோபியருடன் ராசலீலை செய்தருளினான் கண்ணன் தன் கள்ளமற்ற இனிய லீலைகளினால் கோபிகைகளுடன் விளையாடி தெய்வ அவதாரத்திற்கும் அவன் அடியார்களுக்கும்இடையே என்றும் நிலவும் பேரன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளான். காளியனின் ஆணவத்தை அடக்கி கிருஷ்ணன் காளிய மர்த்தனம் ஆடியதும் இந்த யமுனையில்தான்.யமுனை கருமை நிறமானவள் என்றாலும் கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதால் தூயப்பெருநீர் யமுனை என்று கொண்டாடுகின்றாள் ஆண்டாள் நாச்சியார். கங்கையும் யமுனையும் அந்தர் வாகினியாகிய சரஸ்வதியுடன் சங்கமம் ஆகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் என்னும் புண்ணிய சக்தி பீடம் ஆகும். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை ஆவாள்.

யமுனோத்திரிக்கு புண்ணிய யாத்திரை செய்து யமுனையிலும், வெந்நீர் ஊற்றான சூரிய குண்டத்திலும் நீராடி, அதன் வெந்நீரில் சாதம் சமைத்து அதை யமுனா தேவிக்கு பிரசாதமாக சர்ப்பணம் செய்து தங்கள் இல்லங்களுக்கும் பிரசாதத்தை எடுத்து செல்கின்றனர். யாரொருவர் யமுனை நதியில் நீராடி யமுனை அன்னையை இங்கு தரிசனம் செய்கின்றார்களோ அவர்களின் ஆயிரம் ஜன்ம பாபம் அழிந்து விடுகின்றது.

யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் (10804 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரி பனியாறு கீழ் இமாலயத்தில் 4421மீ உயரத்தில் பந்தர் பூஞ்ச் (குரங்கின் வால்) மலைத்தொடர்களின் கீழ் பகுதியில் சப்தரிஷி குண்ட்டில்(குளம்) அமைந்துள்ளது. சப்தரிஷி குளத்திற்கு பயணம் செய்வது மிக்க கடினம் என்பதால் மலையேறும் வல்லுநர்களும் மிக்க சிரத்தை கொண்ட பக்தர்கள் மட்டுமே இங்கு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இம்மலைத்தொடருக்கு அருகில் காளிந்தி எனப்படும் சூரிய மலைத்தொடர் உள்ளது.

புராண வரலாறு : மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான்  கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சிவபெருமானைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக்  கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில்  இருந்தது. காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது.

 

கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர்  பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப் படுகின்றன. நர-நாராயணர் பத்ரிகா என்னும் கிராமத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம், உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கு இருந்து அருள வேண்டும் என்று வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இமயத்தில் கேதார் என்னும் இடத்தில் ஜோதிர்லிங்க வடிவத்தில் திகழ்கிறார். அவர் கேதாரேஷ்வரர்  என்று போற்றப் படுகிறார்.

 

கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள்,  கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான  நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான  வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதே போன்ற அமைப்பு,  கேதார்நாத்திற்கு அருகில் , சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது.  ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. தலைமை அர்ச்சகர் கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது  கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது. சைவ இலக்கியங்களில் "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "..வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்

 

தலபெருமை: இமயமலை - கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக் கொள்கின்றனர். இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர். இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும் படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று!

 

யமுனோத்திரி கோயில்:  இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின், உத்தரகாசி மாவட்டத்தில் 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் யமுனை அம்மனுக்குஅர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். அரித்வாரிலிருந்துயமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழுப் பகற்பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான அனுமான் சட்டிஎனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.

கங்கோத்ரி  கோயில்: பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்துபுனிதத்தலம் ஆகும். கங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடம். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில்தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.

பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை வந்ததாகவும் அதனாலேயே பாகீரதி எனும் பெயர் உண்டானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

 

கேதார்நாத் கோயில்:  சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது. அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 

 

இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள்ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில்மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால்இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன்கோயில்களுள்  ஒன்றாகும். இதுஉத்தராகாண்ட்  மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில்  மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின்அடியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இது திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இங்குபாண்டவர்கள்  சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் ஆதி சங்கரரின்வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்குஇமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோயில்  கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும்  சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.

 

கங்கையின் எதிர்க்கரையில் தப்தகுண்டம் என்ற வெண்ணீர் ஊற்றும், எதிரே பத்ரிநாராயணன் ஆலயமும் உள்ளன. ஆலயத்துக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறம் நீலகண்ட பர்வதமும் உள்ளன. தப்தகுண்டத்திலிருந்து

கோவிலுக்கு சிறிது வடக்கே கங்கையின் கரையில் ப்ரஹ்மபகபாலம் என்ற பெரிய பாறையன்று இருக்கின்றது. இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோக்ஷமடைவதாகவும் பிறகு சிராத்தங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்றும் நம்பப்படுகிறது. கோயில் ப்ராகாரத்திற்குள் லக்ஷ்மீ தேவிக்கும் ஆதி சங்கரருக்கும் தனிக் கோயில்கள் உள்ளன. கோயில்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் லஷ்மீந்ருஸிமர்மந்திர் என்கிற தனிக்கோயிலில் ஸ்ரீ ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத்ராமானுஜர் முதலியோருக்கு ஸந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும் எதிரே நரநாராயண பர்வதங்களும் வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளன. இது தவிர, இவ்வூரில் வஸுதாரா என்ற பனிமலை நீர்வீழ்ச்சியின் திவலைகள் தன்மேல் பட்டுப் புனிதமாதவற்குப் பல யாத்ரிகர்கள் அங்கே செல்வதுண்டு.

வழிபடும் முறை: இங்கு வரும் பக்தர்கள் முதலில் வெந்நீர் ஊற்றான தப்த் குண்டத்தில் நீராடி பின் சூரிய குண்டத்தில் சாதம் வடித்து அல்லது உருளைக்கிழங்கை வேக வைத்து, புத்தாடை புனைந்து அருகில் உள்ள திவ்ய சிலா என்னும் பாறைக்கு (வெந்நீர் ஊற்று இங்கிருந்துதான் பாறைகளின் நடுவிலிருந்து உற்பத்தியாகி வருகின்றது) அர்ச்சனை செய்து பின்னர் முப்பெரும் தேவியருக்கு சூரிய குண்டத்தில் வேக வைத்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து, வளையல், குங்குமம், கண் மை படைத்து வழிபாடு செய்து பின்னர் திருக்கேதார நாதருக்கு அபிஷேகம் செய்யவும், தங்கள் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவும் யமுனை நதியின் புண்ணிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு அனுமனை தரிசனம் செய்து விட்டு மிக்க மனமகிழ்ச்சியுடன் அடுத்த தலமான கங்கோத்திரிக்கு புறப்படுகின்றனர்.  யமுனோத்த்ரியில் இரவு தங்குவது மிகவும் விஷேசமானது என்று புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.

முதலில் யமுனோத்ரி சென்று கேதாரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய யமுனை தீர்த்தம் அடுத்து கங்கோத்ரி சென்று கங்கை தீர்த்தம் சேகரித்துக் கொண்டு பின் கேதாரீஸ்வரம் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இறுதியாக பத்ரிநாதம் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் பின் இராமேஸ்வரம் சென்று கங்கை நீரால் இராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சாலச்சிறந்தது. பொதுவாக செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் செல்வது  மிகச் சிறந்தது.  தற்போது கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு தலங்களுக்கு மிக அருகாமை வரை பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் செல்கின்றன. தங்கும் வசதிகளும் மேம்பட்டுள்ளன.தங்குவதற்கு பல வசதிகள் உள்ளன. மடங்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் என எல்லா வகை , அவரவர்கள் பண வசதிக்கேற்றாற்போல தங்கும் வசதிகள் கிட்டும். நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பின் அன்னை ஜானகிசட்டிக்கு அருகில் உள்ள கர்சாலி கிராமத்திற்கு எழுந்தருளி ஆறு மாதங்களுக்கு அருள்பாலிக்கின்றாள் பின்னர் அக்ஷய திருதியை அன்றைக்கு யமுனோத்திரிக்கு திரும்பிச் செல்கின்றாள்.

எப்பொழுது செல்வது :

வருடத்தில் ஆறு மாதம் இத்தலங்களில் பனிமூடி இருக்கும் என்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையும், செப்டெம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையும் இந்த யாத்திரைக்கு ஏற்ற காலமாகும் , ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மழைக்காலமாகும் எனவே இச்சமயங்களில் பயணம் செல்லாமல் இருப்பது நன்று. இவ்விடங்களில் கோடைக்காலங்களில் கூட குளிராக இருக்கும். மலைகளின் உச்சியில் பயணம் செய்வதால் சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென்று மாறக்கூடியது. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று பலத்த மழை பெய்யக்கூடும், நல்ல மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் அடைபடும் போகின்ற இடத்திற்கு சரியான சமயத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். சில சமயம் பனி மழை பொழியும். ஏப்ரல் மே மாதங்களில் பலத்த காற்று வீசும். புழுதிப்புயல் எனப்படும் மண்ணைவாரி வீசும் காற்றும் கூட இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே நமக்கு அவர் தரிசனம் கிட்டும் என்று சரணாகதி மனப்பன்மையுடன் சென்றால்தான் ஒரே தடவையில் நான்கு தலங்களையும் தரிசனம் செய்ய முடியும். 

சித்திரை (ஏப்ரல்-மே மாதம்) அக்ஷய த்ரிதியையன்று தொடங்கி தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மாதம் வரையில் இத்திருக்கோவில்கள் திறந்திருக்கும். துவாரம் திறக்கும் நாள் அகண்டஜோதி தரிசனம் செய்ய பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும், ஜூலை , ஆகஸ்டு மாதங்கள் பருவமழைக் காலம் என்பதால் அதிகமாக நிலச்சரிவுகள் ஏற்படும் என்பதால் அச்சமயத்தில் யாத்திரை மேற்கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

பயண விபரம்: யமுனோத்திரிக்கு   

விமான நிலையம் : டேராடூன் ( 99 கி.மீ )

ரயில் நிலையம் : ரிஷிகேஷ்  ( 101 கி.மீ )

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​