Top >>Temples >>புண்ணிய நதிகள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
01. கங்கா

01. கங்கா

கங்கை

 

பிறப்பிடம்:இந்தியாவின் இமயமலையில்உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக்எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற  நதியுட இணைந்தபின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது.

 

பிறகு உத்தரப் பிரதேசம்பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லிபத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம்,வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில்கலக்கிறது.

 

ரிஷிகேஷ்ஹரித்வார்அலகாபாத்வாரணாசிபட்னா,கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.

இது இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது, மற்றொரு புனித நகரமான ஹரித்துவாருக்கு ஏறத்தாழ 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

 

சிறப்புகள் : கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப் புக்கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடி வைத்துவிட்டால் வருடக்கணக்கில் கெடாது. மேலும், சாதாரணமாக எலும்பு கள் தண்ணீரில் கரை யாது. ஆனால் கங்கை நதியில் இடப்படும் எலும்புகள் கரைந்து விடும். ஆகையால்தான் காசியில் மணிகர்னிகா காட்டில் தகனம் செய் யப்படும் சடலங்களின் எலும்புகள் கங்கை நதி யில் இடப்படுகின்றன. சாதுக்கள், பிரம்மச்சாரி கள், குழந்தைகளின் சடலங்களை தகுந்த முறை யில் பூஜித்து துணியில் சுற்றி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். சில நாட்களில் அவை கரைக் கப்பட்டு நீருடன் கலந்துவிடும். அதனால்தான் கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதில்லை. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது.

 

ரிஷிகேஷ் : இந்துக்களின் புனிதமான நகரம், தேவபூமி,   இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது. ரிஷிகேஷ் ராம்ஜீலா, லட்சுமணஜீலா, சிவாநந்தா ஆஸ்ரமம் மற்றும் பல கோவில்கள்.

கங்கையானவள், இமயமலையை விட்டு இறங்கி   நேரடியாக ரிஷிகேஷ் வருவதால், மாசுபடாத கங்கையாக சாம்பல் நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறாள்! பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன. சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு 'குஞ்சாபுரி' என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் 'நீல்கந்த் மஹாதேவ் கோவில்' உள்ளது. சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் குளத்தின் நீரில் பழபெரும் 'ரகுநாத் கோவிலின்' பிம்பத்தை பக்தர்கள் காணலாம்.

ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் கங்கை ஆற்றின் கரையில்  சிவபுரி கோவில்  அமைந்திருக்கிறது.   அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது.

 

இமயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது..
 
 
கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை கிட்டத்தட்ட ரிஷிகேஷம் முழுவதும் நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு பயணித்துக்கொண்டிருகிறது.

ரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன் ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..
 

கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது. இங்கிருக்கும் ஆசிரமங்களுக்காகவும், பழமைவாய்ந்த கோவில்களுக்காகவும் பல்தூரப் புகழ் பெற்று விளங்குகிறது ரிஷிகேஷ்.. இந்து புராணங்களின் படி ராமாயணத்தின் வில்லனான ராவணனைக் கொன்ற பின்பு ராமன் இங்கு நீராடியதாக நம்பப்படுகிறது. இதே இடத்தில் தான் ராமனின் தம்பியான லட்சுமணன் சணல் கயிற்றால் ஆன பாலம் அமைத்து நதியைக் கடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்தப் பாலம், லக்ஷ்மண ஜூலா என்று வழங்கப்படுகிறது.

 

சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு குஞ்சாபுரி என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. புராணங்களின்படி தன் மனைவியான சதியை சிவபெருமான் கைலாச மலைக்கு சுமந்து சென்ற போது சதியின் மேல்பாகம் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.

சிவன் தன் இறந்து போன மனைவியை சுமந்து செல்லும் போது மனைவியின் இடுப்புப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் எழுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் நீல்கந்த் மஹாதேவ் கோவில் உள்ளது.

 

இக்கோவிலைச் சுற்றி விஷ்ணுகூத், மணிகூத், பிரம்மகூத் ஆகிய குன்றுகள் அமைந்திருக்கின்றன். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத முக்கிய தளமாகும். குப்ஸ் என்ற சந்நியாசிக்கு யமுனை நதி பரிசாக அளித்த நீரால் இந்த குளம் நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. பழபெரும் ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பக்தர்கள் இக்குளத்தின் நீரில் காணலாம்.

 

இதுமட்டுமல்லாது ஸ்ரீபாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ளிவாலெ பஞ்சாயத்தி ஷேத்ரா என்ற புகழ்பெற்ற ஆசிரமம் இங்கு உள்ளது. அதன் தலைமையகம் ரிஷிகேஷிலும், கிளைகள் கார்வால் எங்கும் பரவி இருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி கோவிலையும் பயணிகள் காணலாம். சிவன் கோயிலான இது கங்கை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீல்கந்த் மகாதேவ் கோவில், கீதா பவன், ஸ்வர்க ஆசிரம் ஆகியவை ரிஷிகேஷில் உள்ள மற்ற புகழ்பெற்ற இடங்களாகும். கார்வால் இமாலயப் பாதை, புவானி நீர்குத், ரூப்குந்த், கெளரி பாதை, காலிந்து கால் மலைப்பாதை, கன்குல் கால் மலைப்பாதை மற்றும் தேவி தேசியப் பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகளாகும். மலையேற்றத்துக்கு தகுந்த மாதங்களாக ஃபிப்ரவரி முதல் அக்டோபர் வரை கருதப்படுகிறது.

 

ஹரித்வார் :  மலைமேலே இருக்கிறாள் சண்டிதேவி. ஆதி சிலையை அமைத்தவர் ஆதிசங்கரராம். கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். சண்டி தேவி கோயில் இருக்கும் மலையில் அஞ்சனைக்கு ஒரு கோயில். சின்ன கோயிலில் அஞ்சனை மடியில் சின்ன ஹனுமான். மான்ஸி தேவி கோயிலிலிருந்து கீழே இறங்கும் போது ஹரித்வாரின் முழு அழகையும் ரசிக்கலாம். ஹரிதுவார் பகிரத முனிவர் தன் தவவலிமையால் கங்கையை பூமிக்கு வரவழைத்த இடம், மானஷா தேவி கோவில். மாயா தேவி மந்திர் இதுவும் மிகப்பழமையான ஒரு கோயில். சித்தப்பீடக் கோயில். சதியோட உடலின் ஒரு பாகம் விழுந்த இடம்.
 

 

பத்ரிநாத்: மகாலட்சுமிக்கு பிடித்த இருப்பிடமான பத்ரி ( இலந்தை ) மரத்தின் கீழேதான் பத்ரி நாராயணன் அமர்ந்து இருப்பதாக ஐதிகம். தாயார் பத்ரிநாராயனனுக்கு இலந்தை மரமாக காட்சி அளித்த இடம்.

முக்திநாத் 108 தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ முக்தி நாராயண தரிசனம்.

 

 

ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.

 

ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, கொத்வார், டெஹ்ராடூன், ஹரித்வார் ஆகியவற்றுக்கு ரயில் வசதி உள்ளது. ரிஷிகேஷுக்கு சாலை வழியாக பயணிக்க விரும்புவோர் டெல்லி, டெஹ்ராடூன், ஹரித்வாரில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பேருந்து வழியாக இலக்கை அடையலாம்.

 

கங்கோத்திரி கோயில் : இந்தியாவின் இமயமலையில்உத்தரகாண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில் ]கங்கோத்திரியில் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆற்றின் பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை மாதாவிற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்:யமுனோத்திரி கோயில்கேதார்நாத் கோயில், மற்றும் பத்ரிநாத் கோயில்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமர்சிங் தாபா எனும் நேபாள இராணுவ தளபதி மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு பாகீரதி என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு கங்கை ஆறு என்றும் பெயர்.வரலாறு :  இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. 
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, திரிவிக்கிரமராக நெடிதுயர்ந்து வளர்ந்து, முதலடியால் பூலோகத்தையும், இரண்டாவது அடியால் வானுலகையும் அளந்தார். அப்பொ ழுது வானுலகில் பகவானின் திருவடியை தரிசித்த பிரம்மன், தன் கமண்டலத்திலிருந்த நீரால் பாதத்தைக் கழுவி பூஜை செய்தார். பெருமாளின் பாதத்திலிருந்து வழிந்த நீரே கங்கையாக உருவெடுத்ததாக புராணக்கதை யொன்று கூறுகிறது. வானுலகில் உற்பத்தியான  அந்த கங்கை ஆகாச கங்கை, தேவநதி, சுரநதி, வானதி, விஷ்ணு பதம் எனப்படுகிறது.  கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.

 

பகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர் கள் முக்தியடைவதற்காக வானுலகிலிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான தவம் மேற்கொண்டான். அதன்பயனாக கங்கை பூமியை நோக்கிப் பாய, அதன் வேகம் பூவுலகை அழித்துவிடும் என்பதால் அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி நிறுத்தி வைத்தார். இதைக் கண்ட பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டதால், ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழச் செய்தார்.

அதில் மூன்று துளிகள் ஹலாதினி, பவானி, நளினி என்று கிழக்கிலும்; அடுத்த மூன்று துளிகள் சுசக்ஷ, சிதா, சிந்து என்று மேற்கிலும் விழுந்து நதிகளாக ஓடின. அலகநந்தை என்னும் ஏழாவது துளி மட்டும் பகீரதனைத் தொடர்ந்து நதியாக ஓடிவந்தது. அப்போது ஜன்னு என்னும் முனிவரின் ஆசிரமம் குறுக்கிட, அந்த ஆசிரமத்தை மூழ்கடித்தது.

இதைக் கண்ட முனிவர் கோபமுற்று அந்த நதியை அப்படியே விழுங்கிவிட்டார். இதைக் கண்ணுற்ற பகீரதன் முனிவரிடம் தன் நிலை யைக்கூறி, தன் முன்னோர்கள் சாபநிவர்த்தி யடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மனமிரங்கிய முனிவர், தான் விழுங்கிய கங்கை நதியை காது வழியாக விடுவித்தார். இதனால் கங்கை "ஜானவி' என்று பெயர் பெற்றது. பின்னர் அந்த கங்கை நீரில் பகீரதன் தன் முன்னோர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களை மோட்சம் பெறச் செய்தான். இவ்வாறு கங்கைக்கு பல வரலாறு கள் உள்ளன. இதற்கிடையில் கங்கை பல காரணப் பெயர்களையும் பெறுகிறது. அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானுடன் விளையாடும்போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டதாம். அந்த மையை சிவ பெருமான் கங்கையில் கழுவும்போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்ட தாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது.

மகாபாரதம், "கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க் கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்' என்கிறது. புனிதம் சேரும். பொதுவாக நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
“கங்கா கங்கேதியோ ப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி”
இத்தனை பெயர்களையும் புகழையும் புனிதத்தையும் பெற்ற கங்கையானவள், மக்கள் தன்னிடம் கரைத்த பாவச்சுமைகளைப் போக்கிக் கொள்ள தமிழகத்திற்கு வருகிறாள். அத்தலம் மாயூரம் ஆகும். இங்கு வரும் காவேரி நதியின் நந்திக்கட்டத்தில், துலா மாதமான ஐப்பசியில் நீராடி புனிதமடைகிறாள். மேலும், மக்கள் தன்னிடம் சுமத்திய பாவக்கரைகள் நீங்குவதற் காக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதரிடம் வேண்டி அருள்புரியும் நிலையில் உள்ளாள்.

இத்திருத்தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாத அமாவாசையில் நீராடினால், அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

 

இந்த நதிக்கு வழக்கத்திற்கு மாறாக ஆக்ஸிஜனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. இதனால் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்ய முடிகிறது.. உண்மையில் அறிவு பூர்ணமாகப் பார்க்கும் பொழுது,   இந்த நதி பாயும் பல இடங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல. எனினும் மக்களால் இது ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்த நதியில் ஒவ்வொரு நாளும் மக்கள் பலரும் நீராடுகிறார்கள்.இந்த நதி இதன் கிளை நதிகளுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷின் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.

 

பயண விபரம் :  கங்கோத்திரிக்கு….

விமான நிலையம் : டேராடூன்  ( 122 KM )

ரயில் நிலையம் : ரிஷிகேஷ் 

பேருந்து வசதி  : உண்டு

கார் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​